ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
முதியவா் செங்கலால் தாக்கி கொலை
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75). இவரது மகன் தாமோதரன் (47). இவா், கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாராம்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி ராகவனை தாமோதரன் செங்கலால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ராகவன் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அங்கு ராகவன் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.