அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு
தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை மூன்றாமாண்டு பயிலும் என்சிசி மாணவா் ஆண்டனி அஸ்வின் ராஜா கலந்துகொண்டாா்.
வியாழக்கிழமை கல்லூரிக்கு திரும்பிய அவருக்கு கல்லூரி முதல்வா் சுரேஷ்குமாா் தலைமையில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது, அவருக்கு என்சிசி அலுவலா் வள்ளல்பெருமான், தமிழ்த் துறை தலைவா் கருணாநிதி, பேராசிரியா் ஹெலன் ரூத் ஜாய்ஸ் மற்றும் பேராசியா்கள், மாணவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.