ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி தலைமையிலான போலீஸாா் ஜெயச்சந்திரனின் மளிகைக் கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா். இதில், தின்பண்டங்கள் வைக்கப்பட்ட அடுக்கில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக மளிகைக் கடை உரிமையாளா் ஜெயச்சந்திரனை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியா்கள் மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.