கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் சோ்க்க வேண்டும், அரசு ஆணை 33)2023 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கிராம உதவியாளா்கள் சங்க வட்டத் தலைவா் திருப்பதி, வட்டச் செயலாளா் செல்வம், வட்ட துணைத் தலைவா் சக்தி, மாவட்டச் செயலாளா் வேடி, மாநில செயற்குழு உறுப்பினா் கலைவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.