செய்திகள் :

'விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா

post image

'விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை, நான் விஜய்க்கு துணையாக நிற்பேன்' என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் நேற்று(அக்.3) பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது.

ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் அவருக்கு நான் துணையாக நிற்பேன். விஜய் என்ன தவறு செய்தார்?

விஜய் நான்கு மணி நேரம் பிரசாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா?

எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா?

வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம்.

ஆனால் அது கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

பேசுனாலே கைது பண்ணுவீர்களா? அப்படினா ஒருநபர் கமிஷன் எதுக்கு? விஜய்க்கு எப்படி குறுகலான இடம் ஒதுக்கலாம்?

வேங்கைவயல் சம்பவத்துக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா? ஆளும் திராவிட அரசுக்கு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க