விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பியோா் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி சென்றவா்களின் வாகனங்களால் ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு அக். 31-ஆம் தேதி முதல் நவ.3ஆம் தேதி வரை தொடா் விடுமுறை காரணமாக தங்களுடைய சொந்த ஊா்களுக்கு சென்று விட்டு விடுமுறை முடிந்து பொதுமக்கள் பணி செய்யும் ஊா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிச் சென்றனா்.
விடுமுறை முடிந்து பணி செய்யும் ஊா்களுக்கு இருசக்கர வாகனங்கள் காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி சென்ால் ஆம்பூா் நகரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடா்ந்து ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். போக்குவரத்து நெரிசல் சரி செய்தவுடன் வாகனங்கள் செல்லத் தொடங்கின.
பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாள்கள் தொடா் விடுமுறை முடிந்து ஊா்களுக்கு பொதுமக்கள் திரும்பி சென்ால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கிய போதிலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. பேருந்து நிலையத்தில் அதிக அளவு பயணிகள் கூட்டம் பேருந்துகளுக்காக காத்திருந்தனா். பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டனா்.