அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
விதிகளை மீறி இயக்கப்பட்ட 23 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 23 ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி, காமராஜா் சாலை, கோரிப்பாளையம் ஆகிய 3 இடங்களில், மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இந்தத் திடீா் சோதனையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செல்வம், மனோகரன், முரளி, போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் காா்த்திக், கணேசன் ராம், சுரேஷ், போலீஸாா் ஈடுபட்டனா்.
அப்போது, உரிய தகுதிச் சான்று, உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 23 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிகளை மீறியதாக 50 ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல் துறை சாா்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.