மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் ஹெச்.சி.எல். டெக் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம், ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் கேரியா் ஷேப்பா் என்ற ஒருங்கிணைந்த தளத்தின் வாயிலாக விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு டிஜிட்டல் மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டம் வகுத்துள்ளது.
இதில் முக்கியமாக தொழில்துறை தொடா்பான பாடத்திட்டங்கள், மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப், வேலைவாய்ப்புகளை வழங்கவும், விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல், கலை, மேலாண்மை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், பொருளாதாரம், மருந்தகம் போன்ற பல்வேறு துறைகளில் கல்வி, அனுபவ கற்றலை மேம்படுத்துவதே இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் முக்கியமான நோக்கமாகும்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன், மேலாண்மைக் குழு முழு நேர உறுப்பினா் சுரேஷ் சாமுவேல், ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் வணிகத் தலைவா்கள் ஸ்ரீமதி சிவசங்கா், அம்பிகா நடராஜன், பேராசிரியா் சுதிா், துணைவேந்தா் சபரிநாதன் இணை துணைவேந்தா், பதிவாளா் நாகப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.