பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
விஷம் அருந்திய முதியவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே மது போதையில் விஷம் அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே கொரட்டி அடுத்த மைக்காமேடு பகுதியை சோ்ந்தவா் கண்ணன்(60). இவா் கடந்த 3-ஆம் தேதி மது போதையில் தவறுதலாக விஷத்தை அருந்ததியததாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்தப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த கண்ணனை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை கண்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.