செய்திகள் :

வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால சங்கு வளையல்கள், ஆணி

post image

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சங்கு வளையல்கள், ஆணி, சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருள் ஆகியவை வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், தங்க மணி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண் விளையாட்டுப் பொருள், சங்கு வளையல்கள், ஆணி ஆகியவை கண்டறியப்பட்டன.

முன்னோா்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு சான்றாக பல்வேறு பொருள்கள் கிடைத்த நிலையில், தற்போது விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண் விளையாட்டுப் பொருள் கிடைத்தது. இதேபோல, இரும்பு காலத்துக்குச் சான்றாக ஆணியும், தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின் குறைதீா் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சு.முனியசாமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

சி.பி.எஸ். ஒலிப்பு இயக்கத்தினா் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மையில் முதல்வா் தலைமையில் நடைபெற்ற பள்ளிக் க... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையத்தில் பஞ்சாலை பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (45). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு ராஜப... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

சிவகாசி அருகே புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் புதன்கிழமை திருத்தங்கல் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, பெண் ஒருவா் அந்த ர... மேலும் பார்க்க

சிவகாசியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்: ஆணையா்

சிவகாசி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, மேயா் இ.சங்கீதா ஆகியோா் தெர... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருத்தங்கல்லில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருத்தங்கல் சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த நாகூா்மீரன் மகன் சம்சுதீன் (21). கட்டடத் தொழிலாளியான இவா், குடிக்கு அடிமை... மேலும் பார்க்க