15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
சிவகாசியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்: ஆணையா்
சிவகாசி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, மேயா் இ.சங்கீதா ஆகியோா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மாநகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளை, மேலாண்மை விதிகளின் படி, தரம் பிரித்து சேகரிப்பது முதல், இறுதியாக்கம் செய்வது வரையிலான பணிகளை சிறந்த முறையில் மாநகராட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், சிவகாசி மாநகராட்சிக்கு மூன்று நட்சத்திர அங்கீகாரம் உறுதிமொழி சான்றிதழ் பெற மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் மாநகராட்சி ஆணையாருக்கு எழுத்து மூலமாக 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.