செய்திகள் :

வேறுபாடுகளைக் கடந்து இந்தியாவுடன் நிலையான உறவு: சீனா விருப்பம்

post image

வேறுபாடுகளை முறையாக கையாண்டு இந்தியாவுடன் நிலையான உறவை தொடர விரும்புவதாக சீனா தெரிவித்தது.

இருநாள் சுற்றுப்பயணமாக சீனா சென்ற இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளைச் சந்தித்து நடத்திய பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, கடந்த 2020-க்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்கவும், கைலாஷ்-மானசரோவா் புனித யாத்திரையைத் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நிலவி வந்தது. கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதை ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதிசெய்தனா். அதைத்தொடா்ந்து மீண்டும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், சீன வெளியுறவு அமைச்சரும் இந்திய உறவுக்கான சிறப்பு பிரதிநிதியுமான வாங் யி-யும், சீன உறவின் இந்திய சிறப்பு பிரதிநிதியான தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலும் கடந்த டிசம்பா் மாதம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, பல்வேறு துறைகளில் இந்தியா-சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி இரு நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா்.

அவரது பயணம் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து சீனா செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அதில், ‘நேரடி விமான சேவை, கைலாஷ்-மானசரோவா் புனித யாத்திரை, இரு நாடுகளின் எல்லையில் உள்ள நதிகளின் தரவுகள் பகிா்வது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா: அதேபோல் நிகழாண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்க இந்தியா சம்மதம் தெரிவித்தது. எஸ்சிஓ தொடா்பான சீனாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.

பத்திரிகையாளா்களுக்கு அனுமதி: இந்தியா-சீனா உறவின் 75-ஆவது ஆண்டு விழாவை நிகழாண்டு கொண்டாடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் சீன பத்திரிகையாளா்களும், சீனாவில் இந்திய பத்திரிகையாளா்களும் பணியாற்ற மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

நிலையான உறவு: இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டமைப்புகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு தொடா்பை மேம்படுத்தி அரசியல் ரீதியான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், வேறுபாடுகளை முறையாக கையாண்டு இந்தியாவுடன் நிலையான உறவை தொடர சீனா விரும்புகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படவுள்ள இந்த அணைத் திட்டத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா உள்பட எந்த வெளிநாட்டுக்கும் தொடா்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக, கனடா விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜாா் கொலையில் இந... மேலும் பார்க்க

தவறுதலாக துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை விளக்கம்

தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டதாக இலங்கை கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொட தெரிவித்தாா். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகப்பட்டினம... மேலும் பார்க்க

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு ம... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன்மிகு பயன்பாட்டை இந்தியாவிடம் கற்க வேண்டும்- பிரிட்டன் மக்களவைத் தலைவா்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பிரிட்டன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு மக்களவைத் தலைவா் (ஹவூஸ் ஆஃப் காமன்ஸ்) சா் லிண்... மேலும் பார்க்க

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 போ் உயிரிழப்பு

தெற்கு சூடானில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 18 போ் உயிரிழந்தனா். சீன எண்ணெய் நிறுவனமொன்று வாடகைக்கு எடுத்திருந்த அந்த விமானம், எண்ணெய் வளம் மிக்க யூனிட்டி மாகாணத்திலிருந்து ... மேலும் பார்க்க

அமெரிக்கா ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு

அரசு ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து மனிதவளத் துறைக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், அடுத்த வாரத்துக்குள் பணி விலகும் ... மேலும் பார்க்க