வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: நிதியமைச்சர்!
வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் போன்ற துணைத் துறைகளைப் பயன்படுத்துவது, விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும் பாரம்பரிய பயிர்களின் நிலையற்ற தன்மைக்கு ஏற்ற வகையில் செயல்படவும் உதவும்
குறிப்பிட்ட வேளாண் காலநிலை நிலைமைகள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களின் இயற்கை வள தன்மைகளுடன் ஒத்துப்போகும் உற்பத்தி முறைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.