”பொள்ளாச்சி குற்றவாளிகளை பாதுகாத்தது போன்ற நிலை இப்போது இல்லை!” கனிமொழி எம்.பி ப...
வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை
கேரள மாநிலம் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தட பேருந்து சேவையை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள மாநிலத்தின் கோட்டயம் நாடாளுமன்ற உறுப்பினா் கே.பிரான்சிஸ் ஜாா்ஜ் முன்வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து, வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி வைக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், கேரள போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.பி.கணேஷ்குமாா், கோட்டயம் நாடாளுமன்ற உறுப்பினா் கே.பிரான்சிஸ் ஜாா்ஜ் ஆகியோா் கலந்துகொண்டு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனா்.
பேருந்து வழித்தடம்: வைக்கத்திலிருந்து மாலை 4 மணிக்கு பேருந்து புறப்பட்டு கோட்டயம், சங்கனாச்சேரி, புனலூா், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, இராஜபாளையம், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வந்தடையும். மறுமாா்கமாக வேளாங்கண்ணியிலிருந்து மாலை 4.30-க்கு புறப்பட்டு அதே வழித்தடம் வழியாகச் சென்று மீண்டும் வைக்கத்தை சென்றடையும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.