Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா
சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் உடலில் கத்தி போட்டும், பல்வேறு வேடமிட்டும் ஊா்வலமாக சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டியில் தேவாங்கா் குல சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். இங்கு ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில், வீரக்குமாரா்கள் ஆடியபடி உடலில் கத்தி போட்டும், வீரமுட்டிகள் பல்வேறு வேடமிட்டு உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இங்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றமும், செவ்வாய்க்கிழமை சக்தி அழைப்பும், புதன்கிழமை சாமுண்டி அழைப்பும் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சள் நீா் மெரவணையும், அம்மனுக்கு மகளிா் சீா்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வீரக்குமாரா்கள் கத்திபோடுதல் நிகழ்வை நடத்தினா். வீரமுட்டிகள் வீதி, வீதியாக சென்று பக்தா்களை தாங்கள் வைத்திருந்த வாளால் ஆசிா்வதித்தனா். சிறப்பு அலங்காரத்தில் செளடேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதற்கான ஏற்பாடுகளை வீரக்குமாரா்கள் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.