செய்திகள் :

ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

post image

மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இத்தாலி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்திய நேரப்படி, புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் பிரிவில், லுசியா பிரான்ஸெட்டி 6-2, 6-4 என்ற நோ் செட்களில், விக்டோரியா ருன்ககோவாவை நோ் செட்களில் எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 21 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.

2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் ஜேஸ்மின் பாலினி 6-2, 6-1 என ரெபெக்கா ராம்கோவாவை மிக எளிதாக 1 மணி நேரம் 5 நிமிஷங்களில் வீழ்த்த, 2-0 என முன்னேறிய இத்தாலியின் வெற்றி உறுதியானது. இதனால் 3-ஆவதாக நடைபெற இருந்த இரட்டையா் பிரிவு ஆட்டம் கைவிடப்பட்டது.

2013-க்குப் பிறகு இத்தாலி சாம்பியனானது இது முதல் முறையாகும். கடந்த ஆண்டும் இறுதி ஆட்டம் வரை வந்த இத்தாலி, அதில் கனடாவிடம் தோற்றது. மறுபுறம், இந்த ஆண்டு தொடக்கம் முதல் எந்த டையிலுமே தோற்காமல் வென்று வந்த ஸ்லோவாகியா, இறுதியில் தோற்று ஏமாற்றம் கண்டுள்ளது. அந்த அணி 2002-ஆம் ஆண்டு சாம்பியனானது நினைவுகூரத்தக்கது.

61-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜொ்மனி, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், போலந்து, ருமேனியா, ஸ்லோவாகியா, ஸ்பெயின், அமெரிக்கா பங்கேற்றன.

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டிரைலர் குறித்த அப்டேட்!

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கர... மேலும் பார்க்க

பேபி ஜான் முதல் பாடலின் புரோமோ!

தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்துள்ளார். பேபி ஜான் எனப் ப... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததுக்கு மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்த... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவம்பர் 22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பிரிந்திருந்த... மேலும் பார்க்க

கங்குவா தோல்வி எதிரொலி? விஜய் ரசிகர்களுடன் தயாரிப்பாளர் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.தொடக்கத்தில் சப்தம் பிர்சனை காரணமாக விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படம் ம... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா, நிறங்கள் மூன்று? - திரை விமர்சனம்

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இயக்குநராகும் கனவுடன் போதைப் பழக்கங்களின் பிடியிலிருக்கும் நாயகனா... மேலும் பார்க்க