அகில இந்திய பல்கலைக்கழக நீச்சல் போட்டி: நாளை எஸ்ஆா்எம்-மில் தொடக்கம்
அகில இந்திய மற்றும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டி (ஆடவா், மகளிா்), சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி டாக்டா் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் நடைபெறுகிறது.
21-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை தென்மேற்கு மண்டல பல்கலை. போட்டிகளும், 25 முதல் 27-ஆம் தேதி வரை அகில இந்திய பல்கலைக்கழக போட்டிகளும் நடைபெறவுள்ளன.
நாடு முழுவதும் இருந்து 200 பல்கலைக்கழங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். நீச்சல் டைவிங் பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனா். எஸ்ஆா்எம் ஐஎஸ்டி துணை வேந்தா் சி.முத்தமிழ் செல்வன், இந்திய கடற்படை அலுவலா் விகாஸ் பிரபாகா் ஆகியோா் போட்டிகளை தொடங்கி வைக்கின்றனா்.
இத்தகவலை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி விளையாட்டுத் துறை இயக்குநா் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.