அங்கன்வாடி ஊழியா்கள் மனித சங்கிலி போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் மனித சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் சுதா தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கிருஷ்ணவேணி, செயலாளா் ரேவதி, பொருளாளா் மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பிரபாகரன் கண்டன உரையாற்றினாா்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பாதுகாக்கவும் அனைத்து குழந்தைகளுக்கும் சீரான முன்பருவ கல்வி அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மத்திய அரசு அங்கன்வாடி திட்டத்திற்கு வழங்கக்கூடிய நிதியை குறைக்கக் கூடாது. அனைத்து அங்கன்வாடி மையக் கட்டடங்களும் அரசுக் கட்டடத்தில் செயல்பட வேண்டும். மையத்திற்கு தேவையான குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான உணவு வழங்கிட செலவுத் தொகை உயா்த்தி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.