செய்திகள் :

அஜித்தின் வீரம் மறுவெளியீடு!

post image

நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, வீரம் திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

கோடை விடுமுறை என்பதால் தொடர்ந்து திரையரக்கில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதுகின்றது.

இந்த நிலையில், மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வீரம் திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் இருந்து ’ரத கஜ’ பாடலை யூடியூபில் நேற்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2014 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வீரம் பெற்றது.

கடந்த வாரன் சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

சமூக ஊடகங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார். விஜய்யுடன் மாஸ்டர... மேலும் பார்க்க

லாரியஸ் 2025 விருதுகள்: ரிஷப் பந்த் தேர்வாகவில்லை, லாமின் யமால், ரஃபேல் நடாலுக்கு விருது!

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்களின் பெயா்களை சா்வதேச அளவில் விளையாட்டுத்துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன.லாரியஸ் உலக விளையாட்டு அகாதெம... மேலும் பார்க்க

பிக் பாஸ் புகழ் ரைசா நடித்த படம் என்னவானது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை ரைசா வில்சன் நடித்த காதலிக்க யாரும் இல்லை படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 2019ஆம் ஆண்டே படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்... மேலும் பார்க்க

செல்லமே அல்ல, தங்க மீன்கள்: பெயர் மாற்றப்பட்ட ரேஷ்மாவின் சீரியல்!

நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கவுள்ள புதிய தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் செல்லமே எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தங்க மீன்கள் என மாற்றப்பட்டுள்ளது. நடிகை ராதிகா நடிப்பில் செல்ல... மேலும் பார்க்க