நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
``அஜித்துடன் பணியாற்றிய போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை; அந்த நேரத்திலும் அவர்..'' - சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஏப்ரல் 24-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதில் சுந்தர்.சி-யிடம் அஜித் குறித்து கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், "அஜித் பற்றி நான் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அவரை பற்றி நான் சொல்வது ஒரே வார்த்தை தான் 'HARD WORK'.
நான் அவருடன் பணியாற்றிய போது (உன்னைத் தேடி) அவருக்கு உடல்நிலை சரியாக இல்லை. அந்த நேரத்தில் மிக கஷ்டப்பட்டு நடித்தார்.

அந்த கஷ்டத்திலும் நடனம் சண்டை என கடினமாக உழைத்தார். அந்த உழைப்புதான் அவரை இந்த உயரத்திலும், மக்களின் அன்பிலும் வைத்திருக்கிறது." என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...