நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், கடன் கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளின் இருப்புகளிலும், கடன் தொகைகளிலும் பெரிய அளவில் முரண் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர்களிடம் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வங்கியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை மதிப்பீட்டளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்குமார் பொதுமக்கள் அடகு வைத்த 8.250 கிலோ தங்க நகைகளை வங்கி மேலாளருடன் இணைந்து திருடியது தெரியவந்தது. உடனடியாக, ரமேஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமாருடன் இணைந்து வங்கி மேலாளர் கதிரவன் மற்றும் அவரின் நண்பரான செந்தில்குமார் ஆகியோர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் கதிரவன், நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.250 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அடகு வைத்த நகைககள் வங்கி ஊழியர்களால் திருடப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















