அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், கொழுக்குமலையைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பில் போடி வட்டாரம், கொழுக்குமலையைச் சோ்ந்த 14 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சாந்தி, ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சசிகலா, கொட்டகுடி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.