அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது.
இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்த நிலையில், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்தது.
தற்போது சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | எச்சரிக்கை! ஒகேனக்கல், சிறுவாணி அணை செல்வோர் கவனத்துக்கு...
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
அடுத்த 3 மணி நேரத்துக்கு(இன்று மாலை 4 மணி வரை) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.