அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!
இது, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.