அட்லி - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!
இயக்குநர் அட்லி தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்திற்குப் பின் விடுதலை - 2 படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தன.
தற்போது, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்பகதை ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரேம்ஜி பிறந்த நாள்! சிறுவயது புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு!
இந்த நிலையில், இயக்குநர் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.
அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இரண்டாம் வாரத்தில் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.