செய்திகள் :

அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..' - திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

post image

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.கா-வின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டில் கட்சியின் தொடர் களப்பணிகளின் ஒரு பகுதியாக இன்று உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலமாக தொடங்கி வைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். வரும் 2026- ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்தக்கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. ’ஒத்தக்கருத்து’ என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான். தி.மு.க அரசின் அவலங்களைக் கண்டித்து ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலைகூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

gk vasan

இது போன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் மதுபானக் கடைகள்தான். மதுபானக் கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், தற்போது எஃப்.எல் - 2 எனப்படக்கூடிய மனமகிழ் மன்றங்களை, மதுபானக்கூடங்களை திறப்பதை நிறுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். புயல், கனமழையால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்” என்றார்.

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க