செய்திகள் :

அதானியைவிட 2.5 மடங்கு சரிவைக் கண்ட அம்பானி!

post image

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம், ஜூலையில் அதன் உச்சநிலையிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடிக்குமேல் குறைந்துள்ளது. பங்குகள் அவற்றின் அதிகபட்சப் புள்ளியான ரூ.1,608.95-லிருந்து கிட்டத்தட்ட 21 சதவிகிதம் சரிந்தன.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தற்போது சில அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த காரணங்களால்தான் அம்பானியின் நிகர மதிப்பு சரிந்துள்ளது.

கடந்த 5 மாத காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு 9.8 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி, சுமார் ரூ. 2 லட்சம் கோடி சரிவைச் சந்தித்தாலும் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:ஐபிஎல் மூலம் அஸ்வினுக்கு ரூ. 97.2 கோடி!!

அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் போது ஜூலையில் 120.8 பில்லியன் டாலர் என்ற உச்சத்தில் இருந்த அவரது நிகர மதிப்பு, டிசம்பர் 13 ஆம் தேதி வரை 96.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக, 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் அம்பானி விலகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மற்றொரு இந்திய பணக்காரரான கௌதம் அதானியின் நிகர மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், அதானியின் நிகர மதிப்பு 9.8 பில்லியன் டாலர் மட்டுமே சரிந்துள்ளது. அதானின் இழப்பைவிட அம்பானியின் இழப்பு கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாகும்.

இருப்பினும், இந்தாண்டில் ஷிவ் நாடார் சொத்து மதிப்பு 10.8 பில்லியன் டாலரும், சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 10.1 பில்லியன் டாலரும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு அமலுக்கு வ... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 31 உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும், மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெற்றுள்ளனர். ப... மேலும் பார்க்க

மும்பை படகு விபத்து: கடற்படை படகு மோதியதே காரணம்!

மும்பையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதற்கு கடற்படையின் படகு மோதியதே காரணம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... மேலும் பார்க்க

கர்நாடகம்: வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் நால்வர் பலி!

கர்நாடகத்தில் வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர்.கர்நாடகத்தில் குடிபள்ளி கிராமத்தில் இரண்டு மோட்டார் பைக்குகள் மீது வெற்று தக்காளிப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி நேருக்குநேர... மேலும் பார்க்க

அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாகவே அம்பேத்கர் மீ... மேலும் பார்க்க