அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசுத் தொகை
சென்னை: தமிழகத்தில் வேளாண்மை செய்து அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கினார்.
விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி உரையாற்றத் தொடங்கிய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில்,
வேளாண்மை செய்து அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் மூன்று விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாவது விவசாயிக்கு 1.50 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.