செய்திகள் :

அதிமுக கள ஆய்வுக் கூட்டமா, அடிதடிக் களமா? - தொடரும் மோதலும் பின்னணியும்

post image

கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அணிகளின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 10 பேர் கொண்ட ' கள ஆய்வுக் குழு' ஒன்றை அமைத்தார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகியோரை கொண்ட இந்த கள ஆய்வுக் குழு அ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களில் பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிமுக கள ஆய்வுக்குழு

இந்நிலையில், நெல்லை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வுக்கூட்டம் களபேரமாகியிருக்கிறது.

இதுகுறித்து சீனியர் அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, " அம்மா இருக்கும்போது கட்சியின் உள்விவகாரங்களை அறிந்துக் கொள்ளவும், அதை சரிசெய்ய பஞ்சாயத்து செய்யவும் நால்வர் அணியை அமைத்து இருந்தார். அதில் எடப்பாடியும் ஒருவர். இந்த நால்வர் அணியின் என்ன செய்ததோ, அதை செய்யதான், இந்த 10 பேர் குழுவை அமைத்திருக்கிறார் எடப்பாடி.

அதன்படி, முனுசாமியும் வளர்மதியும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல் சீனிவாசனும், தங்கமணியும் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆய்வு செய்கின்றனர்.

களபேரமான கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம்

நத்தம் விசுவநாதனும், செம்மலையும் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடியிலும், வேலுமணியும் வரகூர் அருணாசலமும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகு வெற்றிப் பெற்றாலும் தோல்விப் பெற்றாலும் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதன்மூலம் நிர்வாகிகளின் மனக்குமுறல் ஓரளவுக்காது கொட்டப்படும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நிர்வாகிகள் மனக்குமுறலை கொட்ட வழியே இல்லாமல் இருந்தது. அதுதான் தற்போது கள ஆய்வுக்கூட்டத்தில் ஆங்காங்காங்கே வெடிக்கிறது. அதன்படிதான், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம், நாகை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் கொதிக்கத் தொடங்கி இருப்பதுதான் கள ஆய்வுக்கூட்டம் களபேரக்கூட்டாமாகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

இந்த கள ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கழக மேல்மட்ட நிர்வாகிகளுக்கு மட்டும்தான் பேச அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் மாவட்ட செயலாளர்கள் மீது தங்களின் வன்மத்தை காட்ட முற்படுகிறார்கள். பதிலுக்கு மா.செ தரப்பும் வன்மத்தை காட்டுகிறது. நெல்லையிலும் மதுரையிலும் நடந்தது அதுதான். அதற்கே இப்படி பிரச்னை வெடிக்கிறது. மாவட்ட கழகத்தில் உள்ள பிரச்னையை வெளிப்படையாக சொல்ல இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு அனுமதியே வழங்கப்படுவதில்லை. கள ஆய்வுக்கு குழுவும் அவர்களின் கருத்தை கேட்க தயாராகவும் இல்லை. உண்மையான பிரச்னைகள் தெரியாமலே அடிதடி மோதல்களால், கட்சியின் பெயர் கெட்ட பெயர் ஆகிறது." என்றனர் விரக்தியுடன்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு

அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சிதிலடமடைந்த சிலைக்கு அடியில் பேருந்துக்காக தஞ்சமடையும் மக்கள்; ஆபத்தை உணருமா அரசு?

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டைஅடுத்தகோடியூரில்‌ அமைந்துள்ளது இந்த இடம். வாணியம்பாடி, ஆம்பூர் ,வேலூர் மற்றும் பிறஊர்களுக்குச்செல்வதற்காகப்பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தகோ... மேலும் பார்க்க

அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்டாச்சார்யா?!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவ... மேலும் பார்க்க

"Scotland Yard இணையானது நமது தமிழக காவல்துறை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3359 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.அதில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்... மேலும் பார்க்க