அதிவேகமாக ரூ.1,500 கோடி வசூலித்த புஷ்பா 2!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.1,508 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
14 நாள்களில் இந்த சாதனையை அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக 1,500 கோடி வசூலித்த முதல் படமாக புஷ்பா 2 திரைப்படம் இருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதனை வெளியிட்டு, “கமர்ஷியல் சினிமாவை புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.1,000 கோடி வசூலிக்க இன்னும் ரூ.27.05 கோடி தேவைப்படுகிறது.
ஹிந்தியில் மட்டும் ரூ.607.6 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.