அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!
மான்செஸ்டர் சிட்டி அணியின் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் (25 வயது) மெஸ்ஸியின் சாதனைக்கு மிக அருகில் இருக்கிறார்.
குறைவான போட்டிகளில் வேகமாக கோல் அடிக்கும் பட்டியலில் எர்லிங் ஹாலண்ட் முன்னேறி வருகிறார்.
சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 50 கோல்களை அடித்து எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 62 போட்டிகளில் ரூட் வன் நிஸ்டெல்ராய் அடித்திருந்தார்.
இருப்பினும் இளம் வயதில் 50 சாம்பியன்ஸ் லீக் கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியே (24 ஆண்டுகள், 284 நாள்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.
அடுத்ததாக, மெஸ்ஸி அதிவேகமாக 80 போட்டிகளில் 60 கோல்களை அடித்தும் அசத்தியுள்ளார்.
இத்துடன் 70, 80, 90, 100 போட்டிகளில் அதிவேகமாகவும், இளம் வயதிலும் முதலிடம் பிடித்த பட்டியலில் மெஸ்ஸியே இருக்கிறார்.
அதிவேகமாக 80 கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மட்டுமே மெஸ்ஸி இரண்டாம் இடம் வகிக்கிறார். லெவண்டாவ்ஸ்கி இதில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது, எர்லிங் ஹாலண்ட் 50 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். அடுத்ததாக, அதிவேகமாக 60 கோல்கள் அடித்த மெஸ்ஸி சாதனையை முறியடிக்க இவருக்கு நல்ல வாய்பிருக்கிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த ஹாலண்ட் தேசிய, கிளப்பின் கடைசி 10 போட்டிகளில் 17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.