கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
அத்தனூா் அம்மன் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம்
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் அம்மன் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, அத்தனூா் பகுதியில் நடைபெற்று வரும் தாா்சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு சாலையின் நீளம், அகலம், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம், ஒப்பந்தக்கால அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வுமேற்கொண்டாா். சாலைகளை நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக் காலத்துக்குள் தரமானதாக அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் வெயில் காலத்தில் அதிக தண்ணீா் அருந்தி பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, அணைப்பாளையம் பகுதியில் கால்வாய் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு கால்வாயில் உள்ள கழிவுகளை விரைந்து அகற்றுமாறும், மழைநீா் விரைந்து செல்லும் வகையில் சுத்திகரிக்குமாறும் உத்தரவிட்டாா். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.