செய்திகள் :

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு! 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

post image

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டுப் படகில் இருந்து 6,000 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டு மீன்பிடி படகில் இருந்து 6,016 கிலோகிராம் மெத்தம்பேட்டமைனை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது. இதுவரை இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும்.

இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், போதைப்பொருள் கடத்திவந்த படகை இடைநிறுத்துவதற்காக கடற்படை விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படகில் இருந்த 6 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். படகில் இருந்த மெத்தம்பேட்டமைன் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசியை மீட்டு அதிகாரிகள் விசாரணைக்காக அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்தமான் கடலில் சமீபகாலமாக ரோஹிங்கியா படகுகள் மற்றும் மியான்மர் நாட்டுப் படகுகள் அதிகளவில் இந்திய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திவருவது அதிகரித்துள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் யூ-டியூபர் குத்திக்கொலை! சடலத்துடன் தங்கியிருந்த கொலையாளி!

பெங்களூருவில் பெண் யூ-டியூபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த மாயா கோகோய் என்ற பிரபல ப... மேலும் பார்க்க

ஒடிசாவில் 40 யானைகள், 5 சிறுத்தைகள் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 40 யானைகள், 5 சிறுத்தைகள் மற்றும் 200 வனவிலங்குகள் பலியானதாக இன்று மாநில சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுசூழ... மேலும் பார்க்க

பின்வாங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்: சட்ட, நிதி நெருக்கடியில் அதானி குழுமம்!

மும்பை: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாக அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு காரணமாக சர்வதேச முதலீடுகள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை: ஜெ.பி. நட்டா

ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (நவ. 26) விமர்சித்தார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்; மீண்டும் வாக்குசீட்டு முறை வேண்டும்! - கார்கே

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட... மேலும் பார்க்க

பாலத்திலிருந்து கார் விழுந்து 3 பேர் பலியான விபத்து: கூகுள் மேப்ஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் பலியான விபத்தில் கூகுள் மேப்ஸ் அதிகாரி உள்பட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு ச... மேலும் பார்க்க