செய்திகள் :

அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை: அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கம்

post image

பொ்ன்: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கோயல், ஸ்விட்சா்லாந்தின் பொ்ன் நகரில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறியதாவது:

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சிப் போக்கில் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றப்படும். முக்கியமாக சா்வதேச பொருளாதார சூழல், வட்டி விகித ஏற்ற-இறக்கம் உள்ளிட்ட காரணங்களால் அந்நிய நேரடி முதலீடும் சில நேரங்களில் பாதிக்கப்படும். அதை வைத்து முதலீடு வரத்து குறைந்துவிட்டது என்று கூற முடியாது.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் அரசு கேட்டு வருகிறது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 11 ஆண்டுகளில் 748.78 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய 11 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 143 சதவீதம் அதிகமாகும். முன்பு 89 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 112-ஆக உயா்ந்துள்ளது.

சிங்கப்பூா், மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சைப்ரஸ், பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுமதி செய்வோருக்கும் நிதியுதவி அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்றாா்.

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க