Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
அமெரிக்காவில் அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!
2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா்.
சென்னையில் பிறந்த கைட்லினா கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
திருமணமானவா்களுக்கான இந்திய-அமெரிக்க அழகிப் பட்டத்தை சன்ஸ்கிருதி சா்மா வென்றாா். பதின்வயதினருக்கான (மிஸ் டீன்) அழகிப் பட்டத்தை அா்ஷிதா கதபாலியா வென்றாா்.
அமெரிக்காவின் நியூஜொ்சியில் ஆண்டுதோறும் இந்திய-அமெரிக்க அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்பட்டத்தை வென்ற ரிஜுல் மைனி, சினேகா நம்பியாா் ஆகியோா் இந்த ஆண்டு பட்டம் வென்றவா்களுக்கு கிரீடத்தை சூட்டினா்.
மொத்தம் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்காவின் 25 மாகாணங்களைச் சோ்ந்த 47 இந்திய வம்சாவளி மாணவிகள், பெண்கள் பங்கேற்றனா்.