செய்திகள் :

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

post image

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பைடன் நிா்வாகத்தின் பிற உயா் அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை வெள்ளை மாளிகையில் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த இருதரப்பு கருத்துக்களை நாங்கள் பகிா்ந்து கொண்டோம்’ என தெரிவித்தாா்.

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகளையும் இந்த பயணத்தின்போது ஜெய்சங்கா் சந்திப்பாா் என தெரிவிக்கப்பட்டது.

உலகம் 2024

ஜனவரி7: வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் ஷேக் ஹசீனா 5-ஆவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.9: பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்

தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.இது குறித்து எக்ஸ் ஊடகத்த... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது

வடக்கு காஸாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி மருத்துவமனைகளில் ஒன்றை இஸ்ரேல் படையினா் வலுக்கட்டாயமாக மூடியதோடு, அந்த மருத்துவமனையின் இயக்குநரைக் கைது செய்தனா்.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்... மேலும் பார்க்க

வங்கதேசம்: வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிா்ப்பு

வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தோ்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்தக் கட்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலிஆஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப ... மேலும் பார்க்க

அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

ரஷியாவில் ஏற்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து தொடர்பாக அஜர்பைஜான் அதிபரிடம் வருத்தம் தெரிவித்து ரஷிய அதிபர் புதின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்க... மேலும் பார்க்க