அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி
அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்ட 50 சதவிகித வரியை விதித்தால், தனது வர்த்தகப் போரில் வரி அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!
இந்த வரியை உடனடியாக நீக்கப்படாவிட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து ஒயின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருள்கள் மீது 200% வரி விதிக்கப்படும் என்றார்.
இந்த அதிகப்படியான வரிவிதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!