``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு
அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகல்யா என்ற தமிழ் தொடரில் நடித்துள்ளார்.
உதயநிதி குருவி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரைப்போலவே அவரது தந்தையும் முதல்வருமான ஸ்டாலினும் சினிமா, சீரியல் என நடித்துவிட்டு, பின்னர் அரசியலில் ஈடுபட்டு தற்ப்போது முதல்வராக உள்ளார்.
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதியின் நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் சன் தொலைக்காட்சியில் 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா தொடரில் நடித்துள்ளார். இத்தொடரில் மஞ்சரி, அப்சர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க: 46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!
இத்தொடரில் இவர் ஒரே காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும், இத்தொடரின் பாடலில் இக்காட்சி இணைக்கப்பட்டதால், தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அன்பில் மகேஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தயாநிதி மாறன், ‘உன் நண்பன் என்பதால் ஒரே காட்சியில் நடித்தததை தினமும் ஒளிபரப்பு செய்வாயா’ என்று உதயநிதியிடம் கேட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸின் நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அகல்யா தொடரின் டைட்டில் பாடலை டி. இமான் இசையமையத்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.