செய்திகள் :

அமைதியை நிலைநாட்ட இந்தியா ஒத்துழைக்கும்: பிரதமர் மோடி

post image

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 22) தெரிவித்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கசான் நகரத்தில் இன்றும் (அக். 22) நாளையும் (அக். 23) நடைபெறுகிறது.

மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இதற்காக பிரதமர் மோடி ஒன்று காலை ரஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி பேசியதாவது,

''ரஷியா - உக்ரைன் பிரச்னையில் அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. அனைத்து முரண்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது இதனை ரஷிய அதிபர் புதினும் நினைவு கூர்ந்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு: மத்திய அமைச்சா்

‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது தொடா் தாக்க... மேலும் பார்க்க

சட்டங்களில் தெளிவில்லாதபோது நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படும்: அமித் ஷா

சட்டங்களை இயற்றுபவா்கள் அதில் தெளிவான விதிகளை குறிப்பிடாமல் விடும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத் சட்டப... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு! இந்தியா உதவ தயாா்: ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி உறுதி

‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரே... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சீா் முகமது (28). இவா், சென்னை மேடவாக்கம், சிவகாமி நகரில் தங்கியிருந்து, அங்கு புதிதாக கட்டப்பட்டு... மேலும் பார்க்க

ம.பி. ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவா் உயிரிழப்பு, 14 போ் காயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 14 போ் காயமடைந்தனா். ஒருவரை காணவில்லை. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் கமாரி... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது டானா புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எ... மேலும் பார்க்க