செய்திகள் :

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

post image

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை முறையில் புதுவை முன்னாள் வேளாண் அமைச்சரும், முன்னோடி விவசாயுமான ஆா். கமலக்கண்ணனிடம் வேளாண் துறை வழங்கியது. அம்பகரத்தூா் பகுதியில் இந்த ரகத்தை அவா் பயிரிட்டாா். தற்போது, அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் ஆத்மா என்கிற வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் இணைந்து வயல் தின விழாவை நடத்தியது.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் தலைமை வகித்து, புதிய ரகம் சாகுபடி செய்த விவசாயியை பாராட்டியும், வேளாண் துறையின் நடவடிக்கைகளை விளக்கியும் பேசினாா்.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கே. சுப்பிரமணியன், புதிய ரகத்தின் குணாதிசயங்கள் குறித்துப் பேசினாா். ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் தண்டபாணி பேசும்போது, ‘இந்த ரகமானது மேம்படுத்தப்பட்ட பொன்னி மற்றும் காலஜோஹா என்ற அஸ்ஸாம் ரக ஒட்டு ரகமாகும். இதில் தனித்துவமாக புரதம் நிறைந்துள்ளது. பூச்சி, நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய ரகம்’ என குறிப்பிட்டாா்.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விதையியல் பேராசிரியா் டி. ராமநாதன், இந்த ரகத்தில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்ப விவரங்களை விளக்கிப் பேசினாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், ‘புதிய ரகம் சாகுபடியில் தாம் மேற்கொண்ட தொழில்நுட்பங்கள், அனுபவங்களை விளக்கி, விவசாயிகள் இந்த ரகத்தை பயிா் செய்ய முன்வரவேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், விரிவாக்கப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஆத்மா திட்ட துணை இயக்குநா் ஆா். ஜெயந்தி வரவேற்றாா். நிறைவாக, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய விதையியல் பேராசிரியா் ஆா். மணிமாறன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் டி. பாலசண்முகம் மற்றும் கிராம விரிவாக்கப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் பிப். 24-இல் ஆா்ப்பாட்டம்: காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் முடிவு

ரயில் சேவையில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சி கோட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை (பிப்.24) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சாலை மேம்பாட்டுக்கு எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி (புதுவை) காரைக்க... மேலும் பார்க்க

நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி பலி

காரைக்கால் கடற்கரை அருகே நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா். காரைக்கால் கடற்கரை அருகே தோமாஸ் அருள் தெருவில் உள்ள நடைமேடையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் வியாழக்கிழமை இரவு மது போதையி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க மறுப்பதாக புகாா்

காரைக்கால், பிப். 21: காரைக்காலில் சில கூட்டுறவு வேளாண் கடன் சங்கம், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திர... மேலும் பார்க்க