1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!
அம்பேத்கருக்கு எதிரானது காங்கிரஸ்; பாஜக அல்ல: அமித் ஷா
பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கருக்கு எதிரானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கருக்கு எதிராக செயல்படுவதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, அம்பேத்கர் குறித்த எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் பேச வேண்டும்.
அம்பேத்கரின் கொள்களைகளை உயர்த்திப்பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். அம்பேத்கரின் புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பாஜக அரசுதான்.
நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.