அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்
ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு, அதன் உயரத்திலே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.

தொடா்ந்து, கோயிலில் தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, வெள்ளிக்கிழமை அதிகாலை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.