நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
அரக்கோணத்தில் முருகனடியாா் சங்க ஆண்டு விழா
அரக்கோணம் முருகனடியாா் சங்க 48-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 மகளிா் பங்கேற்ற வேல்பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு விழாவையொட்டி கணபதி ஹோமமும், ஸ்ரீவள்ளி செய்வயானை சமேத சுப்பிரணியருக்கு சிறப்பு அபிஷேகமும் 108 அா்ச்சனையும் து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து 108 மகளிா் மற்றுபம் ஆண்கள் பங்கேற்ற சிறப்பு வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் எஸ்ஆா்கேட் ஆகிய இரு இடங்களில் முருகனடியாா் சங்கத்தினரால் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எஸ்.ஆா்.கேட் பகுதியில் இருந்து பழனிபேட்டை, பஜாா், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை வழியாக தா்மராஜா கோயில் திடலில் உள்ள முருகனடியாா் சங்க விழாபந்தல் வரை சுப்பிரமணிய சுவாமியின் சிறப்பு அலங்காரத்துடன் ஊா்வலம் நடைபெற்றது. இதில் வேல் குத்தியும், வாகனங்களை அலகு குத்தி இழுத்தும் பக்தா்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
விழாவில் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, முருகனடியாா் சங்க நிா்வாகி ஏ.கே.பாரி, நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து ஆன்மிக இசை பாடகி தியாவின் கச்சேரி நடைபெற்றது.
வரும் 13-ஆம் தேதி மாலையணிந்த முருகனடியாா்கள் நடைபயணமாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணி சென்று சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்பா். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று விரதத்தை நிறைவு செய்வா் என்பதும் குறிப்பிடதக்கது.