செய்திகள் :

அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

post image

குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.

அப்போது, ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.

ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா வெள்ளிக்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. 

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான ப... மேலும் பார்க்க

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்! முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும் என முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும்... மேலும் பார்க்க

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் ... மேலும் பார்க்க