'அரசியல் கோமாளி... நான் பதில் கூறுவதாக இல்லை' - அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பதில் அளிக்கிறேன்.” என்றவரிடம் செய்தியாளர்கள்,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அரசியல் கோமாளிகளுக்கு நான் பதில் கூறுவதாக இல்லை.
இதுகுறித்து நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன். அவர் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். காலையில் ஒரு செய்தி.. மாலை ஒரு செய்தி.. இரவு ஒரு செய்தி என்று இருப்பார். நமக்கெல்லாம் நிறைய வேலை இருக்கிறது. அவரின் பெயரையெல்லாம் வரும் நாள்களில் தவிர்த்து விடுங்கள்.

மக்களை பார்த்து சொல்வதற்கு அவர்களிடம் கருத்துகள் இல்லை. அதனால் பத்திரிக்கை ஊடகங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சியும்.. அவர்கள் கட்சியின் கொள்கைகளை கருத்துக்களாக சொல்லத்தான் செய்வார்கள். முதலமைச்சரின் திட்டங்கள் தமிழ்நாட்டின் அடித்தள மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. முதலமைச்சர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஒவ்வொரு திட்டத்தையும் அவர் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக யார் இருக்கிறார்கள் நாட்டுக்காக யார் உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
