செய்திகள் :

அரசியல் நான்தான் சூப்பர் ஸ்டார்: சீமான்

post image

அரசியல் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

1989-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி, மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள், தமிழீழ போராட்டத்தில் விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும்.

இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

”நடிகர் ரஜினிகாந்த்தும் நானும் 2.15 மணி நேரம் என்ன பேசினோம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.

நாங்கள் இருவரும் பேசியதில் சங்கி ஆகிவிட்டோம் என்றால், அவரை வைத்து படம் எடுத்து சம்பாதிக்கும் நீங்கள்(திமுக) யார். உங்கள் வீட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரை கூப்பிட்டு வைத்துக் கொள்கிறீர்கள். நானும் அவரும் ஒருமுறை மட்டுமே சந்தித்தோம்.

அவர்(ரஜினிகாந்த்) திரையுலக சூப்பர் ஸ்டார், நாம்(சீமான்) அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள்.

நான் இல்லையென்றால் 8 வழிச்சாலை வந்திருக்கும், நான் இல்லையென்றால் பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிவிடுவார்கள்” என்று பேசினார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் சீமான் அவரைத் தொடா்ந்து விமா்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (நவ. 27) 9 காசுகள் சரிந்து ரூ. 84.49 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மத... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன. எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளி... மேலும் பார்க்க

பாம்பு கடித்த சிறுமியை டோலியில் அழைத்துச்சென்ற அவலம்.. வழியிலேயே பலியான சோகம்!

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கோட்டூர் மலை கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்ற நிலையில், சிறுமி வழியிலேயே பலியானார்.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே... மேலும் பார்க்க

தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்... மேலும் பார்க்க

ஆர்டிஎஸ்ஓ ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ. 29) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த ... மேலும் பார்க்க