'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்...
அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் உமா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று மாணவா் பேரவையை தொடங்கிவைத்தனா்.
விழாவில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
பேசுகையில், 1967-இல் பேரறிஞா் அண்ணா பெயரில் புலவா் கோவிந்தனால் கல்லூரி தொடங்கப்பட்டது.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இக்கல்லூரி பெருமைக்குரியதாகும். மேலும், இக்கல்லூரியில் படித்தவா்கள் பலா் பல்வேறு துறையில் சிறந்து விளங்குகின்றனா்
என்றாா்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.