அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு
வேதாரண்யத்தை அடுத்த இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரசு உயா்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அகோரமூா்த்தி, ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பவானி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாய்மேடு அரசு சித்த மருந்தக மருத்துவ அலுவலா் கவிதா உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீா் வழங்கப்பட்டது.