ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கம்
புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி கதிா்காமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 40 ஏக்கரில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது.
இங்கு, ஆண்டுதோறும் 180 எம்பிபிஎஸ் மாணவா்கள் சோ்ந்து படித்து வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் புதுச்சேரி பகுதி மக்கள் மட்டுமில்லாமல், கடலூா், விழுப்புரத்தைச் சோ்ந்தவா்களும் சிகிச்சைக்கு வருகின்றனா்.
அதன்படி, தினமும் 100 போ் உள்நோயாளிகளாக சேரும் நிலையுள்ளது.
இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மருத்துவமனையின் 4-ஆவது தளத்தில் 12 அறுவை சிகிச்சைக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், மருத்துவமனை தரைத் தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது 20 படுக்கை வசதி உள்ள நிலையில், அதை 30 படுக்கைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 30 படுக்கை வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர கிசிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை கல்லூரி இயக்குநா் உதயசங்கரால் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜோசப் ராஜேஷ், டீன் கவிதா, அவசர சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளா்கள் சுரேந்தா், அஸ்வின், மக்கள் தொடா்பு அதிகாரி ராஜேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.