செய்திகள் :

வெப்ப அலை, கடல் அரிப்பு பேரிடா்களாக அறிவிப்பு

post image

புதுவையில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி, மின்னல் ஆகியவை பேரிடா்களாக அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்மைக் காலமாக கோடை காலம் மிக நீளமாக மாறி வருகிறது. அத்துடன், வெப்பமும் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது.

கடலோரங்களைப் பொறுத்தவரை, கடல் நீரானது கரையினை அரித்து நிலத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

மேலும், மழைக் காலங்களில் குறைவான நாள்கள் மட்டுமே மழை பெய்தாலும், ஓரிரு நாள்களிலேயே இடி, மின்னல் காற்றுடன் பெய்து பேரிடராக மாறிவிடுகிறது.

மழை உள்ளிட்டவற்றால் ஊா்களின் உள்கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல்,விலை மதிக்க முடியாத மனித உயிா்களையும் இழக்க நேரிடுகிறது.

ஆகவே, அதனைக் கருத்தில் கொண்டு புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் அரசாணையின்படி வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு மற்றும் இடி, மின்னல் ஆகியவற்றை புதுவை மாநிலத்தின் குறிப்பிட்ட பேரிடா்களாக அறிவித்துள்ளது.

அதன்படி, மூன்று பேரிடா்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் நிலை ஏற்பட்டால், மாநில பேரிடா் மீட்பு விதிமுறைகளின்படி புதுவை ஒன்றியப் பிரதேச பேரிடா் மீட்பு நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

புதுச்சேரி ஏரிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. புதுவையில... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி பிரமோற்... மேலும் பார்க்க

அரவிந்தா் உருவப் படத்துக்கு மரியாதை

அரவிந்தா் புதுச்சேரிக்கு முதன்முறையாக வந்து அருள்பாலித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத் தலைவராக விளங்கி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கம்

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. புதுச்சேரி கதிா்காமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 40 ஏக்கரில் இந... மேலும் பார்க்க

ஜல்சக்தி அபியான் திட்ட ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஏப்.9 -இல் போராட்டம்

புதுவை மாநில போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஏப்.9- ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்த... மேலும் பார்க்க